முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரிக்கு டிராவிட் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் ரவி சாஸ்திரியை முன்னாள் இந்திய வீரரும், இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டிராவிட் வெகுவாக புகழ்ந்துள்ளார்.இந்திய அணியின் வங்கதேச போட்டிக்கு பிறகு அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படவுள்ளார்.

இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ரவி சாஸ்திரி அணியின் இயக்குனராக சிறந்து விளங்குகிறார். மேலும் காலத்திற்கேற்ற நவீன  கிரிக்கெட் யுக்திகளின் மாஸ்டர் ஆவார். அணியில் இருக்கும் அனைத்து வீரர்களிடமும் இயல்பாக நடந்து கொள்வார். இவர் தலைமையிலான இந்திய அணி மேலும் சிறந்து விளங்கும் என்று டிராவிட் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து