முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்த நைஜீரிய வீரர் மரணம்

திங்கட்கிழமை, 15 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

கோலாலம்பூர்: மலேசியாவின் கோட்டா பாரு நகரில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த நைஜீரியாவைச் சேர்ந்த வீரர் டேவிட் ஒனியா மரணம் அடைந்தார். நைஜீரியாவைச் சேர்ந்தவர் டேவிட் ஒனியா(30). அவர் அண்மையில் தான் மலேசிய கிளப்பில் சேர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மலேசியாவில் உள்ள கோட்டா பாரு நகரில் டி-டீம் மற்றும் கெலந்தான் அணிக்கும் இடையே நட்பு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டி-டீம் சார்பில் ஒனியா கலந்து கொண்டு விளையாடினார். போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் ஒனியா மைதானத்தில் மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் 30 நிமிடங்கள் போராடியும் ஒனியாவை காப்பாற்ற முடியவில்லை. ஒனியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர் இறந்த செய்தி அறிந்ததும் கால்பந்து போட்டி கைவிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து