முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொத்த விற்பனை பண வீக்க விகிதம் சரிந்தது

திங்கட்கிழமை, 15 ஜூன் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - கடந்த மே மாதத்தில் மொத்த விற்பனை பண வீக்க விகிதம் மைனஸ் 2.36சதவீதமாக குறைந்தது. இந்த பணவீக்க விகிதம் முந்தையஏப்ரல் மாதத்தில் மைனஸ் 2.65சதவீதமாக இருந்தது. உணவுப்பொருட்கள்,எரிபொருள், மற்றும் உற்பத்திப்பொருட்கள் விலை சரிந்ததால் பணவீக்க விகிதம் மைனஸ் நிலையில் காணப்படுகிறது. கடந்த 7மாதமாக பணவீக்க விகிதம் சரிவு நிலையிலேயே இருக்கிறது. வரவிருக்கும் மாதங்களில் பொருட்களின் விலை பருவ மழை அளவை பொறுத்தேஇருக்கும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.மொத்த விலை உள்ளடக்க பட்டியல் சார்ந்த பண வீக்க விகிதம் மைனஸ் 2.65சதவீதமாக கடந்த ஏப்ரல்மாதத்தில் இருந்தது.

கடந்த 2014ம்ஆண்டு நவம்பர் மாதம் எதிர்மறையாக காணப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில் பணவீக்க விகிதம் 6,18சதவீதமாக காணப்பட்டது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை விகிதம் இயல்பான அளவைக்காட்டிலும் குறைவாகவே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இருப்பினும் தற்போது துவங்கியுள்ள பருவ மழை நல்ல  அளவிலேயே பெய்துள்ளது.

கடந்த மே மாதத்தில் புரதம் அதிகம் உள்ள பொருட்களான முட்டை,இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை முந்தைய மாதங்களை விட  குறைவாகவே இருந்தது.அதேப்போன்று பால் ,பழங்கள்,அரிசி, மற்றும் தானிய வகைகளின் விலையும் குறைவாக இருந்தன. முந்தைய மாதங்களை காட்டிலும் கடந்த மே மாதம் ஒட்டு மொத்த உணவு பணவீக்க விகிதம் 3.8சதவீதமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து