முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூராசிக் வேர்ல்டு ஹாலிவுட் படம் உலகம் முழுக்க ரூ.3,276 கோடி வசூல் சாதனை

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

மும்பை: சமீபத்தில் வெளியான ஜூராசிக் வேர்ல்டு ஹாலிவுட் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வசூல் சாதனை படைத்துள்ளது.1993-ம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்த ‘ஜூராசிக் பார்க்' படத்தின் புதிய பாகம் ‘ஜூராசிக் வேர்ல்டு'.  உலகம் முழுக்க கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம், இரண்டே நாட்களில் 511 மில்லியன் டாலர் களை (சுமார் ரூ.3,276 கோடி) வசூல் செய்துள்ளது.இது ‘ஹாரி பாட்டர்' மற்றும் ‘டெத்லி ஹாலோஸ் பாகம் 2' போன்ற படங்கள் செய்த வசூல் சாதனையை விடவும் மிகப் பெரியது என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவில் மட்டும் 100 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.600 கோடி) வசூல் செய்துள்ளது. தவிர 66 நாடுகளில் ‘பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்' என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் ஜூராசிக் பார்க் உரிமையாளராக பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி குறித்து அவர் கூறும்போது, "இந்தப் புதிய படத்தின் வெற்றி எங்களுக்குக் கிடைத்த ஓர் ஆசிர்வாதமாக உள்ளது. இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் இந்தப் படம் பெற்றிருக்கும் வரவேற்பைப் பார்த்து நாங்கள் நெகிழ்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனை வருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். ‘ஜூராசிக் பார்க்' படத்தின் முதல் இரண்டு பாகங் களை இயக்கிய இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இந்தப் படத் தின் இணைத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து