முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து தகுதிச் சுற்று: குவாம் அணியிடம் இந்தியா தோல்வி

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

தமுனிங்: சிறிய பசிபிக் தீவு அணியான குவாம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. பிஃபா தரவரிசையில் இந்தியாவைக் காட்டிலும் 33 இடங்கள் பின் தங்கியுள்ள அணி குவாம் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் சேத்ரி கடைசி நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தார். குவாம் அணியில் 38-வது நிமிடத்தில் பிராண்டன் மெக்டோனல்ட் மற்றும் 62-வது நிமிடத்தில் டிரேவிஸ் நிக்லா ஆகியோர் 2 கோல்களை அடித்தனர்.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றுகளில் குவாம் அணி பெறும் 2-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தகுதிச் சுற்றுப் போட்டியில் முன்னதாக துருக்மெனிஸ்தான் அணியை 1-0 என்று குவாம் வீழ்த்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  38-வது நிமிட குவாம் அணியின் கோல் குறிப்பிடத்தகுந்தது ஏனெனில் ரயான் கய் என்பவர் அளித்த நீண்ட த்ரோவை மெக்டோனல்ட் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். 62-வது நிமிடத்தில் நிக்லா, தனது சகவீரரும், சகோதரருமான ஷான் அளித்த நீண்ட பாஸை கோலாக மாற்றினார்.

தரவரிசையில் 141-ம் இடத்தில் இருக்கும் இந்திய கால்பந்து அணி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக இதே போல் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.  குவாம் என்பது அமெரிக்காவின் மேற்குப் பசிபிக் தீவுப் பகுதியாகும். இதன் மக்கள் தொகை 2 லட்சத்துக்கும் சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு குவாம் அணி தற்போது பங்கேற்கிறது. 2000-ம் ஆண்டு தகுதி சுற்றுப் போட்டிகளில் ஈரானுக்கு எதிராக 19-0 என்றும் பிறகு தாஜிகிஸ்தான் அணிக்கு எதிராக 16-0 என்றும் குவாம் அணி தோல்வி தழுவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து