முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ்சின் இளைய மகன் போட்டி

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மகனும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்சின் இளைய சகோதரருமான ஜெப்புஷ் போட்டியிடுகிறார். இதற்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியாகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி முடியரசு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் முதலில் உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் இதில் வெற்றிபெறுபவர்கள் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். சுமார் ஒருமாத காலமாக தங்களது கட்சியினரை சந்தித்து ஹிலாரி ஆதரவு திரட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாடினார். பெண் கல்வி, பொருளாதார சீர்திருத்தம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துவரும் ஹிலாரி, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மகனும், ஜார்ஜ் டபள்யூ புஷ்சின் இளைய சகோதரருமான ஜெப்புஷ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். புளோரிடா மாகாணத்தின் முன்னாள் கவர்னரான ஜெப் புஷ். இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஆனால் ஹிலாரி கிளிண்டனை காட்டிலும் இவருக்கு சற்று செல்வாக்கு குறைவு என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிபர் தேர்தலில் ஜெப்புஷ் போட்டியிடுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து