முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐஎஸ் தீவிரவாதிகள்

வியாழக்கிழமை, 18 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

பாக்தாத், - ஈராக்கில் தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில், ராணுவத்துக்கு சொந்தமான போர் விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ரமாடி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் செய்லபட்டு வருகின்றனர். ஈராக்கின் பல பகுதிகளை தீவிரவாதிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

இருதரப்பினர் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர். தீவிரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படை, ஈராக்கிற்கு உதவி வருகிறது.

தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போது சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியை ஈராக் அரசு நாடியதை அடுத்து, சமீபத்தில் கூடுதல் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் அமெரிக்காவில் இருந்து ஈராக் வந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து