முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் உளவு அமைப்பால் பின்லேடன் 6 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார்

வியாழக்கிழமை, 18 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடனை 6 ஆண்டுகளாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சிறை வைத்திருந்தது எனவும், பின்னர் அமெரிக்க படையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்லேடனை பற்றி 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வரும் நபர், இத்தகவலை தெரிவித்துள்ளார்.அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக அவரை வலைவீசி தேடி வந்தது அமெரிக்கா. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின், அபோதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கப்படையினர் சுட்டு கொன்றனர்.

பின்லேடன் உடலை கடலுக்குள் புதைத்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் பின்லேடன் இறப்பு குறித்து பல்வேறு செய்திகல் வெளியான வண்ணம் உள்ளது. பின்லேடனை சுட்டுக் கொன்றது பாகிஸ்தானுக்கு தெரியும் என்றும், பின்லேடன் உடல் இந்துகுஸ் மலைப்பகுதியில் வீசப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தாக கூறப்படுவது கட்டுக்கதை என அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் செய்மோர் ஹெர்ஷ் என்பவர் சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, பின்லேடனை 6 ஆண்டுகள் சிறைபடுத்தி வைத்திருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. பின்லேடன் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் ஜான் கார் பின் என்பவர், லண்டன் தொலைக்காட்சி ஒன்று அறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், பின்லேடனை பாகிஸ்தான் உளவு அமை்பபான ஐஎஸ்ஐ 6 ஆண்டுகள் சிறைவைத்திருந்தது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இணைந்து சதித்திட்டம் தீட்டி பின்லேடனை சுட்டுக்கொன்றனர். பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்க வீரர்கள் சோதனை செய்ய வந்தபோது, அவர்களிடம் பின்லேடன் ஒப்படைக்கப்பட்டார் என்ற கூறப்பட்டுள்ளது. அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெளியாகும் தகவல்களை அமெரிக்கா மறுத்து வருகிறது. அதிரடி படையினரால்தான் பின்லேடன் கொல்லப்பட்டார் என அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து