முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போடும் பணம் குறைந்தது

வியாழக்கிழமை, 18 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

சூரிச் - சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போடும் பண அளவு குறைந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்வதற்காக இந்தியாவின் பெரும் பணக்காரர்களும் வெளிநாட்டு முதலாளிகளும் அதிக அளவில் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.சுவிஸ் வங்கியில் யார் பணம் போடுகிறார்கள் என்ற விவரத்தை அந்த நாட்டு வங்கிகள் தெரிவிப்பது கிடையாது. சுவிசில் பணம் போடுபவர்களின் பெயர்களும் ரகசியமாக பாதுக்காக்கப்படுகிறது. தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் யார் யார் பணம் போட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்க சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன.

2014ம் ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டிருக்கும் பணம் ரூ12ஆயிரத்து 350கோடியாக குறைந்துள்ளது.அந்த நாட்டு வங்கியில் இந்தியர்கள் போடும் பணம் கடந்த 10சதவீதம் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு இந்தியர்கள் இந்த வங்கிகளில் போட்ட பணம் வெகுவாக குறைந்தபோதும் அதற்கு முந்தைய 2013ம்ஆண்டில் அந்த தொகை 40சதவீதம் அதிகரித்து இருந்தது.சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக போடும் பணம் குறைந்தாலும் வெளிநாட்டு நபர்கள் போடும் பணம் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து