முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கொடியை அவமதித்ததாக அமிதாப் பச்சன் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

மும்பை -  தேசிய கொடியை அவமதித்ததாக பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது.  அரசு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சேதன் திமான் என்பவர் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.  அந்த மனுவில் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியின்போது இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அது தொடர்பான வீடியோவை நான் எனது நண்பர் களுடன் சமீபத்தில் இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அதில் அமிதாப் பச்சன், இந்த வெற்றியை கொண்டாடும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதில் அவர் தேசிய கொடியை தனது முதுகிலும், தோளிலும் போர்த்தி, இழுத்து தேய்த்துக் கொண்டிருந்தார். முன்னதாக 2011-ம் ஆண்டு அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனும் தேசியக் கொடியை தன்மீது போர்த்தியும், தேய்த்தும் அவமதித்தார் என்று கூறப்பட்டிருந்தது.  இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இருவரும் ஜூலை 13-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து