முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியைக் காப்பாற்றக்கோரி உலக மக்களுக்கு போப் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

வாடிகன் - பருவநிலை மாறுபாட்டில் இருந்து பூமியைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவரும் புதிய புரட்சியை தொடங்க வேண்டும் என்று கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.  பருவநிலை மாறுபாடு குறித்து கத்தோலிக்க கர்தினால்களுக்கு 192 பக்க கடிதத்தை போப்பாண்டவர் எழுதியுள்ளார். அந்க் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தொழில் வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பூமியின் வளங்களை மனிதர்கள் சூறையாடி வருகின்றனர். இதனால் பூமி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நமது வருங்கால தலைமுறையினருக்கு நாம் என்ன விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இரண்டு விதமான பிரச்சினைகளை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். ஒன்று சுற்றுச்சூழல் பாதிப்பு. மற்றொன்று கலாச்சார சீரழிவு. இதில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அபாயகரமானது.  தொழில்நுட்பத்தின் உதவியால் இயற்கை வளங்களை மனிதன் அழித்து கொண்டே வருகிறான்.

எரிசக்தி தேவைக்காக சுற்றுச்சூழலை சூறையாடுகிறான். இதன் எதிரொலியாக இப்போது அடிக்கடி இயற்கை பேரிடர்கள் நேரிடுகின்றன. இதேநிலை நீடித்தால் இந்த நூற்றாண்டிலேயே நாம் பேரழிவுகளைச் சந்திக்க நேரிடும்.இதேபோல பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அதனைக் காப்பாற்ற புதிய புரட்சியை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 20, 22:00

    பூமியைக் காப்பாற்றுவதற்கு உலக மக்களை மனம் வெதும்பி அழைக்கிறார் போப் ஆண்டவர் என்னும் கிறிஸ்துவ மதகுரு !
    தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக ,தங்கள் கைவசம் வந்துவிட்ட அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக உலகிலுள்ள அத்தனைக் கடவுளரையும் வீட்டுக்கு அழைக்கிறார்கள் ஒரு சிலபேர் ...இறைவா
    நீ என்ன செய்யப் போகிறாய் ?

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து