முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா நடிக்கும் இறைவி

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
மற்றும்
கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில்,
கார்த்திக் சுப்புராஜ்
இயக்கத்தில்
விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா
நடிக்கும்
“இறைவி”


அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சீவி குமார், கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார்.
இறைவி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை பிட்சா, ஜிகர்தண்டா வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சூப்புராஜ் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

முதன்முறையாக விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் இன்று SJ சூர்யா, பாபி சிம்ஹா நடித்த காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. இப்பட்த்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:


ஷிவா விஜயகுமார் - ஒளிப்பதிவு
சந்தோஷ் நாராயணன் - இசை
ஆர் கே விஜய் முருகன் – கலை
நிகில் - மக்கள் தொடர்பு:
ஜிகர்தண்டா படத்தின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் - படத்தொகுப்பு
விஷ்ணு கோவிந்த் மற்றும் ஸ்ரீ ஷங்கர் - சவுண்ட் டிசைனர்
சரவணன் - நிர்வாக தயாரிப்பு
சீவி குமார் - கே ஈ ஞானவேல் ராஜா - தயாரிப்பு
கார்த்திக் சுப்புராஜ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து