முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையின் இறப்பு சான்றிதழை கேட்ட பின்லேடனின் மகன் - மறுத்த அமெரிக்கா

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

ரியாத் - அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இறப்பு சான்றிதழை அமெரிக்காவிடம் அவரது மகன் கேட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றது. இந்நிலையில், ஒசாமா பின்லேடன் மகன் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு ரியாத்துக்கான அமெரிக்க தூதருருக்கு கடிதம் எழுதியதை விக்கீலிக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து எழுதப்பட்ட இந்த கடிதத்தில் பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்டு அவரது மகன் அப்துல்லா பின்லேடன் கடிதம் எழுதியிருந்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதர் கிளென் கீஸர், உங்கள் தந்தை ஓசாமா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு கிடைத்தது. அமெரிக்க வெளியுறவு துறையின் சட்ட நிபுணர்கள் இது போன்ற ஆவணங்கள் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். ராணுவ நடவடிக்கையில் நடைபெறும் இதுபோன்ற தனிநபர் கொலைகள் வழக்கமானவைதான், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பின்லேடன் கொல்லப்பட்டதால் அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் கைவிடப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்திய நீதிமன்ற ஆவணங்களை பின்லேடன் மகனுக்கு அமெரிக்க தூதர் அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆவணங்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து