முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேசே யோகா தினம்: மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கேள்வி

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. யோகாவை உலகம் முழுவதும் பிரபலமாக்க இந்திய பிரதமர் மோடி அரசு சார்பில் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. அதன் பயனாக ஜூன்-21 சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்தது.  இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி யோகாசம் செய்பவரா என்ற கேள்வியை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் கேட்டுள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில் அவரிடம் யோகா விழிப்புணர்வை மோடி பரப்பிவருவது குறித்து கேட்கப்பட்டது. புதின் கூறுகையில், அதெல்லாம் சரிதான். ஆனால் மோடியே யோகா செய்கிறாரா என்பது தெரியவில்லையே. அவர் எனது நண்பர்தான். ஆனாலும் அவர் யோகா பயிற்சி செய்வாரா என்பது தெரியவில்லை என்றார்.

மோடியும், புடினும், மிகவும் பிடிவாதக்காரர்களாக பார்க்கப்படுகிறார்களே என்ற நிருபர்களின் கேள்விக்கு, "நான் ஒன்றும் பிடிவாதக்காரன் இல்லை. விட்டுக்கொடுக்க தயாராகவே உள்ளேன். பெரும்பாலும் எதிர்தரப்புதான் பிடிவாதமாக இருந்துவிடுகிறது" என்றார் புடின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து