முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா கால்பந்து தொடர்: நெய்மருக்கு தடை

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

சாண்டியாகோ -  பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், மைதானத்தில் முறைதவறி நடந்தததற்காக கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் முக்கிய நட்சத்திரமான பிரேசில் வீரர் நெய்மர் இந்த தொடரில் இனிவரும் போட்டிகளில் விளையாட தடைவித்து தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து நெய்மரை வெறுப்பேற்றி, நீண்டகால அவரது கோபத்தை கிளறி அவரை மோதலில் ஈடுபடவைத்து இப்போது தடையையும் வாங்கிக் கொடுத்துள்ளது கொலம்பியா.

முக்கியப் போட்டிகளில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். யுஏஃபா சாம்பியன் லீக், ஸ்பானிய லீக் என்று கோபாவேசப்படாமல் ஆடும் நெய்மர் பிரேசில் அணிக்காக ஆடும் போது பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டிருக்கலாம், ஆனால் அவரது பொறுமையை சோதித்தது கொலம்பியா என்பதும் உண்மையே. அன்று கொலம்பியா அணிக்கு எதிரான லீக் சுற்றில் நடுவர் இறுதி விசிலை ஊதிய பிறகு நெய்மர் பந்தை கொலம்பியாவின் பாப்லோ அர்மீரோவிடம் ஆக்ரோஷமாக அடித்துள்ளார்.

மேலும் அவர் இன்னொரு வீரரை தலையால் முட்டியதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட கொலம்பியாவின் கார்லோஸ் பாக்காவுக்கும் 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. இவர் நெய்மரை பின்னாலிலிருந்து இடித்தார். இன்று வெனிசூலாவுக்கு எதிரான போட்டியில் இயல்பாகவே நெய்மர் பங்கேற்க முடியாத நிலை இருந்தது, காரணம் அவர் ஏற்கெனவே 2 மஞ்சள் அட்டைகள் பெற்றுவிட்டார். பிரேசில் அணி நாக் அவுட் சுற்றுக்குச் சென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் நெய்மரின் தடை முடிவுக்கு வரும் இல்லயெனில் அடுத்த கோப்பா அமெரிக்கா வரை இந்தத் தடை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 4 போட்டிகள் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து