முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை கொலை வழக்கில் முஷரப்புக்கு கைது வாரண்ட்

சனிக்கிழமை, 20 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: இரட்டை கொலை வழக்கில் முஷரப்புக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், இவர் அதிபராக இருந்தபோது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மதகுரு ஹாஷி அப்துல் ரஷீத் அவரது தாயார் சஹிபா ஹாதூன் ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து வால் மஸ்ஜித் குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அதிபர் முஷரப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அப்துல் ரஷீத் மகன் ஹாரூன் ரஷித் புகாரின் பேரில் கடந்த 2013ம் ஆண்டில் முஷரப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையின்போது தான் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தரவிலக்கு அளிக்க கோரி முஷரப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கம்ரான் பஷரத் முப்தி முன்னாள் அதிபர் முஷரப் கட்டாயம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராக தவறும் பட்சத்தில் அவரை கைைது செய்து ஜூலை 24ம் தேதிக்குள் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக ஜாமீனில் வர முடியாத கைது வாரண்டும் பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து