முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலங்குடி குரு பகவான் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை துவக்கம்: ஜூலை 5ம் தேதி குரு பெயர்ச்சி

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015      ஆன்மிகம்
Image Unavailable

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பிரகார ஸ்தலமாக உள்ளது. ஜூலை 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, இந்த கோயிலில் 2 கட்டங்களாக லட்சார்ச்சனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி முதல்கட்ட லட்சார்ச்சனை துவங்கியது. இது 28ம் தேதி வரை நடக்கிறது. துவக்க நாளை முன்னிட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. குரு பகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2வது கட்டமாக குரு பெயர்ச்சிக்கு பின் ஜூலை 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. காலை 9 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். ரிஷபன், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

பரிகாரம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர், நடச்த்திரம், ராசி லக்கனம், கோத்திரம் ஆகிய விவரங்களுடன் ரூ.400 தொகையை பணவிடை மற்றும் டிடி எடுத்து கோயில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம். டிடி எடுப்போர், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையில் அல்லது சிட்டி யூனியன் வங்கி திருவாரூர் மாவட்ட ஆலங்குடி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து உதவி ஆணையர் / செயல் அலுவலர், ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ஆலங்குடி - 612801, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் சாத்தையா, தக்கார், உதவி ஆணையர் சிவராம் குமார் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து