முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய அமெரிக்க பக்தரிடம் லஞ்சம் வாங்கிய விஜிலென்ஸ் ஊழியர் கைது

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விரைவில் தரிசனம் செய்ய வைப்பதாக கூறி அமெரிக்க பக்தரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஜிலென்ஸ் ஊழியர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன் தினம் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக இருந்தது. இதனால் தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பக்தர்கள் ஒருவர் சுவாமி தரிசனம் செய்ய சுபதம் நுழைவு வாயில் வழியாக சென்றார். அவரிடம், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக விஜிலென்ஸ் ஒப்பந்த ஊழியர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார். அதன்படி, அவரும் ரூ. 5 ஆயிரம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கிருந்த சக வெளிநாடு பக்தர்கள் அவரிடம் இது வெளிநாட்டினருக்காக ஏற்படுத்தப்பட்ட இலவச தரிசன நுழைவு பாதை என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பக்தர் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விஜிலென்ஸ் ஒப்பந்த ஊழியர் பாலகிருஷ்ணா அவரிடம் பணம் வாங்கியது தெரியவந்தது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் திருமலை முதலாவது டவுன்காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார். பாலகிருஷ்ணாவை கைது செய்தனர். இது போல் வேறு வெளிநாட்டு பக்தர்களிடம் மோசடி செய்துள்ளாரா என்று விசாரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 24, 05:55

    இந்தியன் மானம் அமெரிக்க வரை உளது லஞ்சத்தில்

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து