முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் நாடாளுமன்றம் மீது தாக்குதல்: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

காபூல் - ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று  தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று காலை கீழவை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த தீவிரவாதி ஒருவன் தான் கொண்டு வந்த காரை வெடிக்க செய்தான். இதனைத் பயன்படுத்தி மற்ற தீவிரவாதிகள் கநாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்க செய்தனர்.இதனால் எம்.பி.க்கள் பதற்றமடைந்து தப்பி ஓடினர்.

நாடாளுமன்றத்தில் செய்தி சேகரித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை நேரடியாகவும் ஒளிபரப்பியன. அவைக்குள்ளே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்தின் வெளியேவும் கார் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திலிருந்து அதிக அளவில் புகை கிளம்பியதை அடுத்து பொதுமக்களும் பீதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருன்த போலீசார், ராணுவத்தினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் 6 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், தீவிரவாத தாக்குதலுக்கு பொதுமக்கள் 18 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்றிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் அவையில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட போது, தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்திலிருந்து எம்.பி.க்கள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எபதுல்லா கரிமி தெரிவித்தார். இத்தாக்குதலை தாங்கள் நடத்தியதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து