முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

பெர்லின் - அடால்ஃப் ஹிட்லர் வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் ஜெர்மனியில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சம் யூரோக்களுக்கு விற்கப்பட்டுள்ளன.பவேரியாவிலுள்ள ந்யூஷ்வான்ஸ்டைன் மாளிகை ஓவியமே மிக அதிகமாக ஒரு லட்சம் யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.அதை சீனாவிலுள்ள ஒருவர் வாங்கியுள்ளார். இந்த விற்பனை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இது தவிர நியூரம்பெர்கில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், ஹிட்லர் மலர்க்கொத்து ஒன்றை வரைந்து அதில் கையெழித்திட்டிருந்த ஓவியம் 72,000 யூரோக்களுக்கு விற்பனையானது.கடந்த ஆண்டும் ஹிட்லர் 1914 ஆம் ஆண்டு வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் 129,000 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன.

ஓவிய உலகில் ஹிட்லர் சுமாரான ஓவியராகவே பார்க்கப்பட்டாலும், அவர் வரைந்த ஓவியங்கள் ஏலத்துக்கு வரும்போது அவை பெரிய தொகைகளுக்கு வாங்கப்படுகின்றன. ஜெர்மன் சட்டப்படி ஹிட்லரின் ஓவியங்களில், நாஜிக்களின் சின்னம் பொறிக்கப்படாதவரை அதை விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து