முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அதிபர்களை வேவு பார்த்த அமெரிக்கா: விக்கிலீக்ஸ் தகவலால் பரபரப்பு

புதன்கிழமை, 24 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

பாரிஸ் - பிரான்ஸ் அதிபர்களை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. ஒட்டுகேட்டு உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.  பிரான்ஸ்-க்ரீஸ் உடன்பாடு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டுடனான பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பான பல உரையாடல்களை என்.எஸ்.ஏ. உளவு பார்த்திருப்பதாக வெளியாகி இருக்கும் விக்கிலீஸின் தகவல் பிரான்ஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனனாள் பிரான்ஸ் அதிபர்கள் ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோஸி மற்றும் ஹாலந்தே ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதற்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆவணங்கள் அனைத்தும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. முக்கியமாக, ஐரோப்பாவிலிருந்து கிரீஸ் வெளியேறுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக ஹாலந்தே ஆலோசனை நடத்தியது, 2011-ல் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி, அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முயற்சி செய்ததும் உள்ளிட்டவற்றின் விவரங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதாக பி.பி.சி. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த வாரம், சவுதி அரேபியா நாடு தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிட இருப்பதாக விக்கிலீக்ஸ் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரான்ஸ் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இவ்வாறான ஆவணங்கள் வெளிவரும் என்று விக்கிலீஸ் தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் ஆவண வெளியீட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ''பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவை நாங்கள் உளவு பார்க்கவில்லை. இனியும் அவ்வாறு நடக்காது. எங்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி மட்டுமே உளவு பிரிவு இதுபோன்ற வேலைகளை செய்யும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து