முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேறு மாநில அணிக்காக விளையாடவுள்ள சேவாக்

புதன்கிழமை, 24 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி - வரும் ரஞ்சி கிரிக்கெட் சீசனில் வேறு மாநில அணிக்காக விளையாடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் வீரேந்திர சேவாக். 1997-98 சீசனில் டெல்லி அணியில் அறிகமுமான அவர், 2014-2015 சீசன் வரை டெல்லி அணிக்காக விளையாடினார். இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் டெல்லி அணியில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்துள்ளார். 

இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சேவாக், சர்வதேச போட்டியில் 17,000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டி, 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதான சேவாக், கடந்த ரஞ்சி சீசனில் 568 ரன்கள் குவித்ததார்.  இதேபோல் மும்பையைச் சேர்ந்த மூத்த பேட்ஸ்மேனான வாசிம் ஜாபர், வரும் சீசனில் விதர்பா அணிக்காக விளையாடவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து