முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சுற்றுலாத்துறையின் தூதுவரானார் டென்னிஸ் ஸ்டார் ஸ்டெபி கிராப்

புதன்கிழமை, 24 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசடராக முன்னாள் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ஸ்டெபி கிராப் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஸ்டெபி கிராப் பிராண்ட் அம்பாசடராக்கப்பட்டுள்ளதால் ஆயுர்வதே மருத்துவத்தை உலக அளவில் மேலும் பிரபலமாக்க முடியும் என கேரள அரசு நம்புகிறதாம். 22 முரை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற டென்னிஸ் சாதனையாளர் ஸ்டெபி கிராப். இவருக்கு இன்றளவும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். காரணம், அப்படி ஒரு அருமையான வீராங்கனை இவர். ஸ்டெபி கிராப் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார்.

377 வாரங்கள் தொடர்ந்து அவர் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  இதற்கான முடிவு நேற்று நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்காக ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதேபோல், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அரசு முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து