முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுடனான உறவை வலுப்படுத்த இந்தியா முடிவு

புதன்கிழமை, 24 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

புதுடெல்லி: ஈரானுடனான உறவை வலுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஈரானில் இருந்து அதிக அளவில்  எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அந்த நாடு ரகசிய அணு ஆயுத தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது என குற்றம் சாட்டிய அமெரிக்கா பல பொருளாதார தடைகளையும் விதித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது மேற்கொண்ட பொருளாதார தடைகளால் இந்தியாவும் எண்ணெய் இறக்குமதி செய்வதில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்தது.

இந்த சூழலில் ஈரானுடன் உள்ள உறவை வலுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.ஆப்கானிஸ்தானுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும்  செல்வதற்கு ஈரான் பாதையை இந்தியா பயன்படுத்த விரும்புகிறது.இதுதொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-ஈரான் இடையே பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரானில் உள்ள சப்பர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கர் ஈரான் நாட்டிற்கு சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஈரானுடன் இந்தியா உறவு கொள்வதை அமெரிக்கா எச்சரித்தது. இந்த எச்சரிக் கையை இந்தியா புறக்கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து