முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் நாடாளுமன்ற தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையே காரணம் தேசிய பாதுகாப்பு அதிகாரி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 25 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தன் மீது 7 தீவிரவாதிகள் கடந்த திங்கள்கிழமை பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பு இந்த தாக்குதல் பின்னிருந்து இயக்கியதாக ஆப்கன் தேசிய பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை ஆப்கன் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் புதிய ராணுவ அமைச்சர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அதிரடி யாக புகுந்த 7 தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர், இதில் கட்டிடம் முழுவதும் கரும் புகை பரவியது. எம்பிக்கள் அலறி அடித்து ஓடினர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதில் 7 தீவிரவாதிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எம்பிக்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக அறிவித்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூளையாக செயல்பட்டதாக ஆப்கன் தேசியபாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹசீப் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார். ஹக்கானி நெட்ஓர்க் ஆபரேஷனல் கமாண்டர் மவுல்விஸெரீன், பாகிஸ்தானின் பெஷாவர் பிராந்திய ஐஎஸ்ஐ தலைவர் பிலால் ஆகியோர் கூட்டாக நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்தியதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் சித்திக் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து ஆப்கன் உளவுத்துறைக்கு ஏற்கெனவே தகவல் கிடைத்ததாகவும் அதன் காரணமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டதாகவும், தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சித்திக் கூறினார். ஆப்கானிஸ்தான் அரசு இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதால் அந்நாட்டு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து