முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரமோற்சவங்கள்

வியாழக்கிழமை, 25 ஜூன் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை: திருப்பதி ஏழைமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரமோற்சவங்கல் நடைபெறவுள்ளது. இது குறித்து திருமலையில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இணை செயல் அலுவலர் பேசியதாவது:

இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் 24 மதேதிவரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 14 முதல் 22 ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இந்த இரண்டு பிரம்மோற்சவங்களிலும் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது, தசரா விடுமுறை வருகிறது. இதனால் அதிகளவு பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோயில் அதிகாரிகள், விஜிலென்ஸ், அன்னதானம், சுகாதாரம், மக்கள் தொடர்பு, இந்து தர்மபிரசார பரிஷத், மருத்துவம், பொறியாளர்கள் ஆகியோர் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 7ம் தேதி சூரிய பிரபைவாகன வெள்ளோட்டமும், 29ம் தேதி மாதிரி கருட சேவை, செப்டம்பர் 10ம் தேதி ஆபரணங்கள் சமர்ப்பித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும், பவுர்ணமியன்று பிரம்மோற்சவத்தை போன்று கருடசேவை நடத்தப்படவுள்ளது.

இந்த இரண்டு பிரமோற்சவத்திலும் ஸ்ரீவாரி சேவகர்கள் சாரணசாரணியர், என்சிசி மாணவர்களை அதிகளவு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 2 மலைப்பாதையிலும் தேவையான அளவு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களை கவர தோட்டத்துறை சார்பில் மலர் கண்காட்சி அமைக்க வேண்டும். தேவஸ்தான பால் பண்ணை, பட கண்காட்சி, கூட்டத்திற்கு ஏற்ப கல்யாணகட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து