முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக சச்சின் தேர்வு

வியாழக்கிழமை, 25 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். 2000-ம் ஆண்டு முதல் 100 டெஸ்ட் வீரர்களை பட்டியலிட்டு வாக்கெடுப்பு நடத்தியது கிரிக்கெட்.காம்.ஏயு என்ற இணையதளம், இதில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தையும் சங்கக்காரா 2-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த வாக்கெடுப்பில் சுமார் 16,000-த்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பங்கேற்றனர். மொத்த வாக்கெடுப்பில் 23% வாக்குகளை அள்ளி சச்சின் முதலிடம் பிடித்தார். சங்கக்காரா 14% வாக்குகளைப் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.  டாப்-100 டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பாக சச்சின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. டாப்-10-ல் 4 ஆஸ்திரேலிய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் 2 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து