முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்பு நாடுகளை வேவு பார்ப்பது நிறுத்தப்படும்: ஒபாமா

வியாழக்கிழமை, 25 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - நட்பு நாடுகளை வேவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது, அவை உடனடியாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் அமெரிக்க அதிபர் ஒபாமா  பேசியுள்ளார்.

அப்போது, கடந்த காலத்தில் நட்பு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்த செயல் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவை உடனடியாக நிறுத்தப்படும் என அவர் கூறியதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.  முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, அமெரிக்காவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.  1995 ஆம் ஆண்டு முதல் 2007 வரை சிராக் அதிபராக இருந்த காலத்திலும், 2007 முதல் 2012 வரை சர்க்கோசி அதிபராக இருந்த காலத்திலும், 2012 முதல் தற்போது வரை அதிபராக உள்ள ஹாலண்டேவையும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் கண்காணித்தாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதரை அழைத்து கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து