முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 26 சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

கடந்த 22–ந்தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். மே மாதம் 31–ந்தேதி முதலே அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முகாமிட்டு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இரண்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடந்த 10–ந்தேதி முதலே தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இதுதவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சுயேச்சைகளும் ஓட்டு சேகரித்தனர். நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஓட்டுப் பதிவுக்கான எந்திரங்கள் அமைத்தல் மற்றும் ஏற்பாடுகள் இன்று தீவிரமாக நடக்கிறது.மொத்தம் 530 மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 1,205 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் பணிபுரியும் வாக்குப் பதிவு மையம் இன்று ஒதுக்கப்படுகிறது. தேவைப்படும் வாக்குச் சாவடிகளில் ரகசிய கேமிராக்கள் அமைக்கப்படுகிறது. வீடியோ எடுக்கவும் ஏற்பாடு நடந்துள்ளது. வெப் கேமராக்கள் மூலமும் வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்புகள் தேர்தல் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம்  5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து இந்த தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்த வெளியூர் தொண்டர்கள், கட்சி பிரதிநிதிகள் வெளியேறினார்கள். தங்கி இருந்தவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை அறிய போலீசார் நேற்று முன்தினம்  அதிரடி சோதனை நடத்தினார்கள்.லாட்ஜ்களிலும் சோதனை நடந்தது. வாகன சோதனையும் தீவிரமாக்கப்பட்டது. தேர்தல் பணிமனைகளில் இருந்த படங்கள், கொடிகளும் அகற்றப்பட்டன.இடைத்தேர்தலை யொட்டி ஆர்.கே.நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமாக கருதப்படும் 22 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 4 துணை ராணுவ படை வீரர்களை பணி அமர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரி இதற்கு தலைமை ஏற்பார்.

அதே நேரத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் 16 துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் வெளி ஆட்கள் யாரேனும் தொகுதியில் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28 பறக்கும் படையினர், 6 கண்காணிப்பு குழுவினர், ஆகியோர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஓட்டுப்பதிவின் போது தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும் தனியாக பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக தனி குழுவும் ஏற்பட்டுள்ளது. இதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இடம் பெற்றுள்ளனர். அதி விரைவு குழு என்று பெயரிடப்பட்டுள்ள இக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் விதிமீறல் பற்றிய புகார்கள் கிடைத்தவுடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

சென்னை மாநகர போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோரது மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம்  மாலையில் துணை ராணுவ படையினர் பங்கேற்ற கொடி அணி வகுப்பும் ஆர்.கே. நகர் தொகுதியில் நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து