முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம்: புடினுடன் ஒபாமா ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்களின் ஆதிக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  அப்போது, ஐ.எஸ். பயஙகரவாதிகள் ஆக்கிரமிப்பால் சிரியாவில் நிலவும் சூழல், உக்ரைன், சிரியா மற்றும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் நிலவரம், நேட்டோ படைகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து