முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியில் மோதல் இல்லை: சவுரவ் கங்குலி

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - நமது இந்திய அணியில் எவ்வித மோதலோ கருத்து வேறுபாடோ ஏதும் ஏற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி கூறியுள்ளார். இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் தொடர் டிரா ஆனாது. பின்னர் கேப்டன் தோனியின் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகள் அரங்கேறியது. இதில் வங்க தேச அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.  இதைத்தொடர்ந்து இந்திய அணி மீதும் கேப்டன் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் இந்திய அணியில் ஒற்றுமை இல்லை என ஒரு தரப்பு கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில் இச்சூழல் குறித்து பிசிசிஐ-ன் ஆலோசகரான கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணி தோல்வி பாதையில் செல்லும் போது இது போன்ற சில சர்ச்சைகள் அரங்கேறிவிடுகின்றன. வீரர்கள் களத்தில் முழு திறமையை பிரதிபலிக்காததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் எவ்வித மோதலும் இல்லை என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து