முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணம்

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ - ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16. தெருவில் திரிந்த டமா என்ற இந்த பெண் பூனையை கிஷி நகரிலுள்ள ரயில் நிலைய ஊழியர்கள் வளர்த்து வந்தனர். ரயில்வே நிறுவனம் ஆட்குறைப்புச் செய்தபோது டமாவுக்கு அந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக பதவி வழங்கப்பட்டது.

அத்தோடு பூனையின் தலை அளவிலான தொப்பியும், மாதச் சம்பளம் உணவாகவும் டமாவுக்கு வழங்கப்பட்டது. டமாவைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கிஷி நகருக்கு வந்தனர். அந்தப் பூனை தொடர்பான பொருட்களும் பெரிய அளவில் விற்கப்பட்டன. இந்நிலையில் அந்த பூனை திடீரென மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து