முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் சங்க தேர்தலுக்கான மனு தாக்கல் நடைபெறவிருந்த நிலையில், தேர்தலுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை நடத்த நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தது. வரும் 15 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் விஷால் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி பூச்சி முருகன் தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு பின் நடைபெறும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: சரத்குமார்

வரும் ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.இந்த நிலையில், இதனை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.அதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முறைகேடாக நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்க்கை போலியாக நடத்தப்பட்டு தேர்தல் நடக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து