முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை: பந்துவீச்சில் டாப் 10-ல் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின்

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

துபாய் - ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் பந்துவீச்சில் இந்திய அணியை சேர்ந்த அஸ்வின் மட்டும் டாப் பத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் 10-வது இடத்தில் உள்ளார்.பேட்டிங்கில் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 7-ம் இடத்திலும், கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார்.

பேட்டிங் தர வரிசையில் டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஹசிம் ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவான், தோனி, ராஸ் டெய்லர், கிளென் மேக்ஸ்வெல் டாப் 10 பேட்டிங்கில் இடம் பிடித்துள்ளனர். பந்து வீச்சு பிரிவில் இந்திய வீரர் அஸ்வின் டாப் 10 ல் அடியெடுத்து வைத்துள்ளார். அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் முகமது ஷமி 12-ம் இடத்தில் உள்ளார். பவுலிங் தர வரிசையில் மிச்செல் ஸ்டார்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து