முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு வாங்கிய 231 டன் தரம் குறைந்த சர்க்கரை : தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2015      ஆன்மிகம்
Image Unavailable

காளஹஸ்தி - திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதம் தயாரிக்க வாங்கப்பட்ட 231 டன் தரம் குறைவான சர்க்கரையை தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. லட்டு தயாரிக்க கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

பொருட்களின் தர்ததை ஆய்வு செய்ய தேவஸ்தானத்துக்கு சொந்த மான ஆய்வு கூடம் திருமலையில் செயல்பட்டு வருகிறது. அதில் கர்நாடக நிறுவனம் அனுப்பிய சர்க்கரை தரமற்றவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி கொள்முதல் செய்யப்பட்ட 231 டன் சர்க்கரையை தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது. ஒரு லாரிக்கு 21 டன் சர்க்கரை மூட்டை வீதம் மொத்தம் 231 டன் சர்க்கரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோல் ஐதராபாத்தைச் சேர்ந்த 2 நிறுவனங்கலில் இருந்து வேர்கடலை கொள்முதல் செய்யப்பட்டது. அதுவும் தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. இதையொட்டி அந்த நிறுவனங்கள் அனுப்பிய 34 டன் கண்ட 2 லாரி வேர்கடலையை தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது. தரமற்ற பொருட்களை திருப்பி அனுப்புவது திருப்பதி கோவிலில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றாலும் இவ்வளவு அதிக அளவிலான சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டது இதிதான் முதல் முறை என்று தேவஸ்தான சுதகாதார அதிகாரி சர்மாஸ்ரீ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து