முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சிறையில் இருந்து தப்பிய கைதி சுட்டுக்கொல்லப்பட்டார்

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

மலோன்: அமெரிக்க சிறையில் இருந்து சினிமா பாணியில் தப்பி சென்ற கைதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு கைதியை வலைவீசி தேடி வருகின்றனர். அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள தனேமோரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதிகளான ரிச்சர்ட் மாட், டேவிட் ஆகியோர் கடந்த 6ம் தேதியன்று சிறையில் இருந்து தப்பினர். ஷசாங் ரிடம்ப்சன் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் சாமர்த்தியமாக சிறையில்  இருந்து தப்பியதைபோல் இவர்களும் தப்பியுள்ளனர். சிறையின் அறையில் துளையிட்டு, அங்குள்ள பைப் லைன் வழியாக நுழைந்து சிறைக்கு அப்பால் உள்ள பாதாள சாக்கடையின் மூடி வழியாக வெளியேறி தப்பியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றது பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியது.

சிறை காவலர்கள் 2 பேர் கைதிகள் தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரியவந்தது. ஸ்குரூடிரைவர், பிளேடுகள் போன்றவற்றை கைதிகளுக்கு கொடுத்து உதவியுள்ளனர். அதிகாரிகள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளை பிடிக்க போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். 3 வார தேடுதலுக்கு பிறகு, கனடா எல்லை அருகே நியூயார்க்கின் திடஸ் ஏரி பகுதியில் பதுங்கியிருந்த ரிச்சர்ட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்டது கைதி ரிச்சர்ட் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானது. தலைமறைவாக இருக்கும் மற்றொரு கைதியான டேவிட் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட கைதி ரிச்சர்ட், தனது முதலாளியை கொடூரமாக கொலை செய்த குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். தலைமறைவாக இருக்கும் டேவிட், கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து