முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனத்தை தனி நாடாக வாடிகன் அங்கீகாரம்

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

வாடிகன் - பாலஸ்தீனத்தை தனி நாடாக வாடிகன் அங்கீகரித்தது. இந்த அங்கீகாரம் குறித்து இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரிப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று வாடிகன் மற்றும் பாலஸ்தீனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பாலஸ் தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதால் இஸ்ரேலுடன் அமைதி  மேம்படும்.வாடிகன் மேற்கொண்ட ஒப்பந்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று வாடிகன் தெரிவித்தது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரிப்பது தொடர்பாக வாடிகன் வெளியுறவுத்துறை அமைச்சர் பால் காலகரும் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாட் அல்-மால்கியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்த நிகழ்ச்சி வாடிகன் நகரில் நடைபெற்றது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரிக்கப்போகிறோம் என கடந்த மாதம் வாடிகன் அறிவித்தது.

இந்த அறிவிப்பால் இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளியிட்டது.பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பது அமைதி பேச்சு வார்த்தைக்கு இடையூறாக ருக்கும் .பாலஸ்தீனர்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான உற்சாகத்தையும் குறைக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.இந்த ஒப்பந்தம் காரணமாக இஸ்ரேல்,மற்றும் வாடிகன் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பில் விளைவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

கடந்த 2012ம்ஆண்டு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீரிப்பது என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.இந்த முடிவை வாடிகன் வரவேற்றுள்ளது.இந்த ஒப்பந்தம் குறித்து பாலஸ்தீன அமைச்சர் அல்.மால்கி கூறுகையில் வாடிகனுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது பாலஸ்தீன மக்களின் உரிமை, சுதந்திரம் மற்றும் மரியாதையை அங்கீகாரம் அளிப்பதாக இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் பேச்சு வார்த்தையும் பயனற்றதாக ஆக்குகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் இமானுவேல் நக்‌ஷான் கூறுகையில் வாடிகனுடன் பாலஸ்தீனம் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒரு சார்பு நிலை கொண்டதாக இருக்கிறது.ஜெருசலத்திலும் இஸ்ரேல் நிலப்பகுதியிலும் யூதர்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க உரிமைகள் இருக்கின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து