முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஹிரோஷிமாவில் ஆலோசனை

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

ஹிரோஷிமா - இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதை ஜப்பான் அறிவித்தது. 70 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ராணுவம் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டை வீசியது இதில் அந்த நகரமே முழுமையாக அழிந்தது. ஜி 7 அமைப்பில் உள்ள பல நாடுகள் இப்போது அணு வல்லரசுகளாக திகழ்கின்றன. அந்த நாடுகளின் அமைச்சர்கள் ஹிரோஷிமாவில் கூட உள்ளனர். 

அவர்கள் அணுகுண்டு வீசப்பட்ட பகுதியைப் பார்வையிடவும் அங்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி7 அமைப்பில் ஜப்பான், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இதன் உச்சி மாநாடு 2016 மே 26, 27 தேதிகளில் ஜப்பானின் கான்சி கோஜிமா தீவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஹிரோஷிமாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.  இந்த நகருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் வருவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து