முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் நாடாளுமன்ற தாக்குதலை நடத்திய 6 தீவிரவாதிகளை தனிஆளாக சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்றம் மீது கடந்த 22-ம் தேதி தலிபான் தீவிர வாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 6 தீவரிவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்பது அறிந்ததே. தற்பொழுது வெளியாகியுள்ள தகவலில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத் தின் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளை தனிஆளாக சுட்டுவீழ்த்தியது எஸா கான் என்ற ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த சண்டையில் 6 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் எஸா கான் (28) என்ற ராணுவ வீரர் தனிஆளாக சுட்டுக் கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு அதிபர் அஷ்ரப் கனி உட்பட மூத்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  எஸா கானுக்கு அதிபர் அஷ்ரப் கனி மூன்று படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

ஒரு தொழிலதிபர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சில எம்.பி.க் கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இவை தவிர நாடு முழு வதும் இருந்து எஸா கானுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து கொண்டே வருகின்றன. இதுகுறித்து எஸா கான் கூறியதாவது:  நான் இறைவனின் துணையோடு தீவிரவாதிகளை துணிச்சலோடு எதிர்கொண்டு 6 பேரையும் சுட்டு வீழ்த்தினேன். அந்த கோழைகள் (தலிபான்கள்) இப்போது எனது குடும்பத்தை குறிவைத் திருப்பார்கள். அவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து