முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக ஹாக்கி லீக் அரையிறுதி: பாகிஸ்தானுடனான இந்திய ஆட்டம் டிரா

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

ஆண்ட்வெர்ப் - அனைத்து விளையாட்டுக்களிலும் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய ஆட்டம் டிரா ஆனது.பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் ஹாக்கி உலக லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. "ஏ" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது.

13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ராமன்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார்.23-வது நிமிடத்தில் பாகிஸ்தான் பதில் கோல் அடித்து சமன் செய்தது. அந்த அணியின் முகமது இர்பான் அந்த கோலை அடித்தார். அடுத்த 7-வது நிமிடத்தில் முகமது இம்ரான் மேலும் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் 2-1 என முன்னிலை பெற்றது.

25-வது நிமிடத்திலேயே இந்தியா இதற்கு பதிலடி கொடுத்தது. இந்திய வீரர் ராமன்தீப் சிங் பதில் கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இருதரப்பிலும் கோல்கள் வாங்காததால் இந்த போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. இந்திய அணி முதல் போட்டியில் பிரான்சை 3-2 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டியில் போலந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. அடுத்தப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து