முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மியின் துடைப்பம் சின்னத்தை பயன்படுத்த தடைக்கோரி வழக்கு: கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - ஆம் ஆத்மிக்கு வடிவமைத்து தந்த துடைப்பம் சின்னத்தை திரும்ப பெறுவதாகவும், இனி அதனை அந்தக் கட்சி பயன்படுத்தக் கூடாது என்றும் கட்சியிலிருந்து விலகிய அதன் வடிவமைப்பாளர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி சின்னத்தை வடிவமைத்த சுனில் லால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்குதொடர்ந்துள்ளார். இது குறித்து சுனில் லால் தரப்பில் கூறும்போது, "ஆம் ஆத்மி கட்சிக்கான துடைப்பம் சின்னத்தை நானே வடிவமைத்தேன். அப்போது எனக்கு கட்சியின் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தது.

இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நான் வடிவமைத்த சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சி தலைமையிடம் பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு செவி கொடுக்காமல், கட்சி போஸ்டர்களில் துடைப்பம் சின்னத்தை உபயோகிக்கின்றனர். நான் வடிவமைத்த சின்னத்தை தனியுரிமை பெற்றுள்ளேன். எனது அனுமதியின்றி அதனை ஆம் ஆத்மி உபயோகிக்க முடியாது" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் அகிலேஷ் சந்த்ரா மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து