முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் டோனிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அப்ரிடி ஆதரவு

சனிக்கிழமை, 27 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா - இந்திய துணைக் கண்டத்தில் என்னதான் நல்லது செய்தாலும் கடைசியில் கேப்டனை அவமானப்படுத்தாமல் விட மாட்டார்கள். அந்த நிலைதான் தற்போது டோணிக்கும் வந்துள்ளது. ஆனால் டோணியை இப்படி அவமானப்படுத்தக் கூடாது. அது நியாயமல்ல என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி. பாகிஸ்தான் கேப்டனாக அப்ரிதி இருந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் அவமானங்களைச் சந்தித்தார்.

தற்போது டுவென்டி 20 அணியின் கேப்டனாக தொடர்கிறார் அப்ரிதி. தற்போது வங்கதேச தோல்வியால் டோணி சந்தித்துள்ள நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அப்ரிதி.  வங்கதேசத்திடம் இந்தியா தோற்ற பின்னர் அனைவரும் டோணியைக் குறி வைக்கிறார்கள். இது மிகவும் மோசமானது. நான் வருத்தமாக உணர்ந்தேன். டோணிக்காக நான் அனுதாப்படுகிறேன். இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு வழக்கமாகி விட்டது இது.

ஹீரோக்களை சட்டென்று காலில் போட்டு மிதிப்பது இங்கு வழக்கமாகி விட்டது. குறிப்பாக சாதனைகள் படைத்த கேப்டன்களுக்கே அதிகம் நிகழும் இது. ஒரு வீரரை விமர்சிக்கலாம். ஆனால் அவர் கடந்த காலத்தில் செய்தவற்றையும் பாருங்கள். இப்போது சந்தித்த ஒரு தோல்வியை மட்டும் வைத்துக் கொண்டு அவரை விமர்சிக்காதீர்கள்.

அது நியாயமற்றது.டோணியைப் பாருங்கள். அவரது சாதனைகளைப் பாருங்கள். இந்திய அணிக்காக, இந்தியாவுக்காக எத்தனை பெருமைகளைத் தேடிக் கொடுத்துள்ளார் அவர். அவரது சாதனைகளே அவரது திறமையைப் பறை சாற்றுமே. பேட்டிங்கில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் டோனி என்று கூறியுள்ளார் அப்ரிடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து