முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தொடர்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா,ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராவோவிற்கு தொடர்பு உள்ளது என ஐபிஎல் போட்டியின் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.இது குறித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளிக்க வேண்டும்  என பீகார் கிரிக் கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டம் நடந்தது.இந்த சூதாட்டத்தில் இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா,ரவீந்திர ஜடேஜா,மற்றும் மேற்கு இந்திய தீவு வீரர் பிராவோவிற்கு தொடர்பு உள்ளது என லலித் மோடி சனிக்கிழமையன்று கூறினார். இந்த 3வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுபவர்கள் ஆவார்கள். ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட  எச்.டிஐஎல்.கம்பெனியின் தலைவர் பாபா திவானுடன் மேற்குறிப்பிட்ட 3வீரர்களுக்கும் தொடர்பு உள்ளது அந்தவீரர்களுக்கு அபார்ட்மென்ட்டுகளையும் பணமும் அளித்துள்ளார் என லலித் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

தான் ஐபிஎல் போட்டியின் தலைவராக இருந்த போது ரியல் எஸ்டேட் நிறுவன அதிபரான பாபா ஐபிஎல் அணிகளை ஏலம்  எடுக்கவிடாமல் தடை செய்தேன் என்றும் லலித் மோடி கூறியிருந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனும் ரியல் எஸ்டேட் அதிபர் பாபாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும் லலித் மோடி தெரிவித்து இருந்தார்.கடந்த 2013ம்ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்த போது மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் நடந்தன. இந்த முறைகேடுகளில் குருநாத் மெய்யப்பனும் ராஜ் குந்தராவும் ஈடுபட்டனர் ,அவர்கள் பாபாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர் என்று லலித் மோடி கூறியிருந்தார். ஐபிஎல் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அந்த இருவரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3வீரர்களுக்கு டெல்லி, நொய்டா, மற்றும் மும்பையில் குடியிருப்புகளும் கோடிக்கணக்கில் பணமும் தரப்பட்டது என லலித் மோடி குற்றம் சாட்டியுள்ளார் ஊழல் முறைகேட்டில் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள வீரர்கள் சர்வதேச வீரர்களாகவும் இருக்கிறார்கள்.புதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் குறித்து சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் உரியவிளக்கம் அளிக்க வேண்டும் என பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர்  ஆதித்யா வர்மா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து