Idhayam Matrimony

பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பாஜக தயாரா? லல்லு பிரசாத்யாதவ் சவால்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க தயாரா என்று லல்லு பிரசாத் யாதவ் சவால் விடுத்துள்ளார். பீகாரில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேரங்களில் இறங்கியுள்ளன. இதற்கிடையில் லல்லுவின் ஆர்ஜேடி, முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கரம் கோரித்து மதசார்பற்ற கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. இருந்த போதிலும் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகளின் நிறம் மேலும் மாறவாய்ப்புள்ளது. இந்த சூழலில் லல்லு, நிதிஷ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜ தரப்பிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியிட பாஜ தயக்கம் காட்டி வருகிறது.

இதையடுத்து பீகாரில் சட்டமன்ற தேர்தலில் பாஜ முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயாரா என்று லல்லு சவால் விடுத்துள்ளார். பாட்னாவில் கட்சியின் எம்எல்ஏ, எம்எல்சிக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு லல்லு பிரசாத் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலுக்கு பாஜ முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அல்லது எங்களது கட்சியில் அத்தனை யோக்கியமானவர்கள் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். லோக் சபா தேர்தல் மாதிரி இந்த தேர்தலில் வகுப்புவாத, பிரிவினைவாத குட்டி கரணம் எல்லாம் போட முடியாது. யாதவ்களிடம் சென்று குகும்தியோ நாராயண் யாதவ், நந்து கிஷோர் யாதவ், சுஷில் குமார் மோடி ஆகியோரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என்று பாஜ கூறும். பூமிகார் சமூகத்தினரிடம் சென்று சிபி தாகூல், லாஜ்புத்களிடம் சென்று மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் ஆகியோரை முதல்வராக்குவோம் என்று சொல்லும்.

இது போன்ற மோசமான மனப்போக்குத்தான் பாஜ வசம் உள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன்பாக தெளிவாக இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க முடியுமா? அல்லது அப்படி நேர்மையானவர்கள் யாரும் எங்கள் கட்சியில் இல்லை என்பதை பாஜ ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சாடினார். ஆர்ஜேடியின் 15 ஆண்டுகால ஆட்சியை காட்டாட்சி என்றும், தனது சமூகத்தினரை குற்றவாளிகள் என்றும் தொடர்ந்து பாஜ பேசிவருவது கடும் கண்டனத்திற்குறியது. என்று லல்லு எச்சரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து