முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானியின் அறிவுரையை பின்பற்ற சுஷ்மா, வசுந்தராவுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பொது வாழ்வில் நேர்மை என்ற அத்வானியின் அறிவுரையை சுஷ்மா, வசுந்தரா ஆகியோர் பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். லலித் மோடி விவகாரத்தில் சிக்கி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் பாஜவின் மூத்த தலைவரும், எம்பியுமான அத்வானி சில தினங்களுக்கு முன்பு பேசுகையில், அரசியல் தலைவர்கள் பொது வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். எனது பதவி காலத்தின்போது என் மீது ஹவாலா மோசடி குற்றச்சாட்டு வந்த போது நான் பதவியை ராஜினாமா செய்தேன் என்றார்.

தற்போது சுஷ்மா, வசுந்தரா விவகாரத்தில் அத்வானியின் அறிவுரையை அவர்கள் பின்பற்ற வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில், அத்வானியின் பேச்சு மிகவும் சூசகமாக சுட்டி காட்டியுள்ளது. தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு சுஷ்மா, வசுந்தரா பதவி விலக முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், அத்வானியின் பேச்சு பாஜ உட்கட்சி பூசலை காட்டுகிறது. தங்களது தலைவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். பாஜகவுக்கு எந்த நெறியும் கிடையாது என்பதையே இந்த விவகாரம் உணர்த்துகிறது என்றார். காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூறுகையில், அத்வானியின் பேச்சு பாஜகவுக்கு வேறுபாடுகள் இருப்பதை காட்டுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து