முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் சார்பில் இப்தார் நோன்பு விருந்து: ஜெயலலிதா நாளை வழங்குகிறார்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இஸ்லாமிய பெருமக்களுக்கு நாளை (ஜூலை-1-ந் தேதி) இப்தார் ரம்ஜான் நோன்பு திறப்பு விருந்து வழங்குகிறார்.

இதில் இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள், தோழமைக்கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டு தோறும் ரம்ஜான் மாதத்தில் தமது சொந்த செலவில் இஸ்லாமிய பெருமக்களுக்கு நோன்பு திறப்பு விருந்து அளிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வருகிற ஜூலை முதல் தேதியில் சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நோன்பு திறப்பு விருந்து அளிக்க உள்ளார். இதில் தமிழக தலைமை ஹாஜி சலாவுதின், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, அதிமுக தோழமைக்கட்சி தலைவர்கள் ஷேக் தாவுத், இனாயதுல்லா, பஷிர் அகமது உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நோன்பு திறப்பு விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் வரவேற்று பேசுகிறார். அமைச்சர் அப்துல் ரஹிம் வாழ்த்துரை வழங்குகிறார்.  தலைமை ஹாஜி சலாவுதின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி தருவார். இறுதியில் அன்வர் ராஜா எம்பி நன்றி கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து