முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்பு 2-ம் நாள் கலந்தாய்வு: 219 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, பொறியியல் படிப்பிற்கான இரண்டாம் நாளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று  தொடங்கியது.

கலந்தாய்வில் 173 உடல் ஊனமுற்றவர்கள் உள்பட மொத்தம் 219 மாற்று திறனாளி மாணவ–மாணவிகளே கலந்து கொண்டனர். முதல் இடம் பிடித்த காது கேளாத சென்னை மாணவி பூஜா எம்.ஐ.டி.யில் கணினி அறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்தார். 2–வது இடம் பிடித்த திருச்சி மாணவி சரஸ்வதி பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பாடத்தை அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படிக்க தேர்வு செய்தார்.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 28ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில், விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் மொத்தம் 385 இடங்கள் நிரம்பின. கலந்தாய்வு முடிவில் 115 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களில் மீதமுள்ளவர்கள் வேறொரு நாளில் வரவழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

நாளை  (ஜூலை 1–ம் தேதி) முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு ஜூலை 30–ம் தேதி வரை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து