முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வே எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு ரஹானே கேப்டன்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக, ரஹானே தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சில ஆச்சரியங்கள் அடங்கியுள்ளன.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஜூலை 10-ல் தொடங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளும், இரண்டு ட்வென்டி 20 போட்டிகளும் இதில் அடங்கும். கேப்டன் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ரஹானே தலைமை தாங்குகிறார்.

அதேவேளையில், மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் மூத்த பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா ஆகியோர் இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்புகின்றனர். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு இயக்குநராக ரவி சாஸ்திரி இல்லை. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல், அணியில் எவ்வித சச்சரவும் இல்லை என்றும், தோனியின் விலகல் பற்றியெல்லாம் எதுவும் பேசப்படவில்லை என்றும் கூறிய அவர், "கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ரஹானே கேப்டன் ஆனார்" என்றார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:
ரஹானே (கேப்டன்), முரளி விஜய், ராயுடு, மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஹர்பஜன் சிங், அக்சர் படேல், கார்ன் சர்மா, தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து