முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுஷ்காவுடன் ஜோடி சேரும் உடற் பயிற்சி நிபுணர் ஆர்யா

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

anushka

பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பி வி பி சினிமா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் KS பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் படம் ‘ இஞ்சி இடுப்பழகி’. தீவிர உடற்பயற்சியாளர் என எல்லோராலும் போற்றப் படும் ஆர்யா இந்தப் படத்தில் உடற் பயற்சி நிபுணராகவே தோன்றுகிறார். மெல்லிய-உடலுக்கான தேடலில் இன்றைய மென்பொருள் சமூகம் எப்படி பாடுபடுகின்றது என்பதை நகைசுவையுடன் கூற வருகிறது ‘இஞ்சி இடுப்பழகி’. 

படத்தின் கதைக்கு தேவைப்பட்ட முக்கியமான உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆர்யாவே பகிர்ந்துக் கொள்கிறார்.சமீபத்தில் சர்வதேச மிதிவண்டி பந்தயத்தில் ஆர்யாவின் வெற்றியால் ரசிகர்களது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள ‘சைக்கிளிங்’ இப்படத்தில் முக்கியமான பங்கு வகிக்கவுள்ளது.  காதல்மற்றும் நகைசுவை கலந்த திரைப்படமாக உருவாகிவரும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையில் பழம் பெரும் இயக்குனர் கே . ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் KS பிரகாஷ் இயக்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து