முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் புல்லட் ரயிலில் ஒருவர் தீக்குளித்து பலி

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ: டோக்கியோ-ஒசாகா அதிவேக புல்லட் ரயிலில் நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெட்டியே புகைமண்டலமாக மாற மற்றொருவர் மூச்சுத் திணறி மரணமடைந்துள்ளார். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 3 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். அந்த நபர் தன் தலையில் எண்ணெய் போன்ற ஒன்றை ஊற்றிக் கொண்டு லைட்டரால் தீயிட்டுக் கொண்டார். ரயிலின் முதல் பெட்டியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் யார், அவர் ஏன் தீக்குளித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்ற விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த புல்லட் ரயில் டோக்கியோவுக்கு 80 கிமீ தொலைவில் ஓடாவாரா நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டது. யாரோ ஒருவர் எமர்ஜென்சி பொத்தானை அழுத்த ரயில் நின்றது. அப்போது ரெஸ்ட் ரூம் அருகே ஒரு பெண் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் உயிரிழந்ததாக பிற்பாடு தெரிவிக்கப்பட்டது. 

டோக்கியோ-ஒசாகா இடையே புல்லட் ரயில் சேவை இரண்டரை மணி நேரங்களுக்கு நிறுத்தப்பட்டது. மீட்புப் பணியினர் ரயிலிலிருந்து மூச்சுத் திணறியவர்களை வெளியே கொண்டு வந்தனர்.  டோக்கியோ-ஒசாகா இடையே உள்ள 553 கிமீ தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் இந்த ரயிலில் நடந்த இந்தச் சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து